மீசாலை பகுதியில் கைக்குண்டு மீட்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீசாலைப் பகுதியில் கைக்குண்டு ஒன்று நேற்று (பெப்ரவரி 20) மீட்கப்பட்டுள்ளது.

மீசாலை தட்டான் குளம் பகுதியிலுள்ள காணியொன்றில் சந்தேகக்கிடடமான பொருள் ஒன்றை அவதானித்த நிலையில் உரிமையாளரால் கொடிகாமம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

தகவலுக்கமைய காணிப்பகுதிக்கு விரைந்த கொடிகாமம் பொலிஸார் சந்தேகத்துக்கிடமான பொருளை கைக்குண்டுகள் என அடையாளம் கண்டனர்.

நீதிமன்றத்தின் அனுமதி பெற்று கைக்குண்டை செயலிழக்கச் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

Share this Article