வெளியே வரும்போது நடப்பதை பாருங்கள்!- மஹிந்த விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

சரியான நேரத்தில் நான் வெளியே வருவேன். அப்போது என்ன நடக்கின்றது என்று பாருங்கள் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று(பெப்ரவரி 14) நடைபெற சிநேகபூர்வ சந்திப்பு ஒன்றின்போது ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.

நான் இப்போது வெளியே வர விரும்பவில்லை. எப்படியும் சரியான நேரத்தில் வெளியே வருவேன். பின்னர் என்ன நடக்கின்றது என்று பாருங்கள் என்று மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இப்போது நான் வெளியே வர வேண்டிய அவசியம் இல்லை. நாம் ஒரு இளம் தலைமுறையை உருவாக்கியுள்ளோம். அவர்கள் இந்த நடவடிக்கைகளைத் தொடர வேண்டும் என்று தெரிவித்த மஹிந்த ராஜபக்ச, எப்படியாயினும் சரியான நேரத்தில் நான் வெளியே வருவேன். பின்னர் என்ன நடக்கின்றது என்று பார்ப்போம் என்று சற்றுக் கடுமையான தொனியில் கூறியுள்ளார்.

Share this Article