வடமராட்சி கிழக்கு கடலில் காணாமல் போன மீனவரின் சடலம் மீட்பு!!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வடமராட்சி கிழக்கு, குடாரப்புக் கடலில் காணாமல் போன மீனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைச் சேர்ந்த 39 வயதான பி.ரவிச்சந்திரன் என்ற மீனவரே கடந்த 12ஆம் திகதி காணாமல் போயிருந்தார்.

இருவர் தெப்பத்தில் கடற்றொழிலுக்குச் சென்றபோது தெப்பம் கவிழ்ந்து நீரில் மூழ்கியுள்ளனர். அவர்களி்ல் ஒருவர் நீந்திக் கரைசேர்ந்தார்.

மற்றையவர் காணாமல் போயிருந்த நிலையில் அவரைத் தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்தநிலையில் நேற்று அவரது சடலம் கரையொதுங்கியுள்ளது.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி எஸ்.சிவராசா இறப்பு விசாரணைகளை முன்னெடுத்தார்.

Share this Article