மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன!!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற பிரேரணையை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நிறைவேற்றியுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அகில இலங்கை செயற்குழுக் கூட்டம் நேற்று (பெப்ரவரி 11) கொழும்பு டார்லி
வீதியிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற்றது.

கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இம்முறை உள்ளூராட்சி தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் பலர் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் மேற்படி பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

Share this Article