அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைப்பு!!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

லங்கா சதொச நிறுவனம் நான்கு அத்தியாவசிய பொருள்களின் விலைகளைக் குறைத்துள்ளது.

இந்த விலைக் குறைப்பு இன்று (பெப்ரவரி 9) முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பருப்பு ஒரு கிலோ கிராமின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 305 ரூபாவாகவும், சிவப்பரிசி கிலோ ஒன்றின் விலை 05 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 164 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் வெள்ளை பச்சை அரிசி கிலோ ஒன்று 05 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 179 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் வெள்ளை நாட்டரிசி 04 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 180 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Share this Article