வேலணை துறையூர் சர்வசக்தி அறநெறி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

வேலணை துறையூர் சர்வசக்தி அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் இன்று (பெப்ரவரி 7) வழங்கி வைக்கப்பட்டன.

பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரும், சர்வதேச தமிழ் வானொலி பிரான்ஸ்-இலங்கை(ITR) பணிப்பாளருமான வேலணை மேற்கு சரவணையைச் சேர்ந்த விசுவாசம் செல்வராசாவின் நிதி ஏற்பாட்டில், பதினைந்தாயிரம் ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இந்த உபகரணங்கள் பூமணி அம்மா அறக்கட்டளையின் செயலாளர் ந.விந்தன் கனகரட்ணம், அறக்கட்டளையின் ஆலோசகர் இ.மயில்வாகனம் ஆகியோரால் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் வேலணை துறையூர் ஐயனார் கலாமன்றம் தலைவர் கந்தையா இராசரெத்தினம்,சர்வசக்தி அறநெறி பாடசாலையின் பொறுப்பாசிரியர் இராசரெத்தினம் பிரதீபா,ஆசிரியரான பரமநாதன் விஷ்ணுகா, பெற்றோர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Share this Article