ஆரியகுளம் நாக விகாரையில் பொலிஸார் இரத்ததானம்!!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

யாழ்ப்பாணம் ஆரியகுளம் ஸ்ரீ நாக விகாரையில் பொலிஸாரால் நேற்று (பெப்ரவரி 5) இரத்ததானம் வழங்கப்பட்டது.

ஆரியகுளம் ஸ்ரீ நாகவிகாரையின் விகாரதிபதி சிறீ விமலதேரர் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த இரத்ததான முகாமில் யாழ்ப்பாணத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலர் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர்.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் குருதித் தட்டுப்பாடு நிலவுவதாக அண்மைய காலங்களில் செய்திகள் வெளி வந்திருந்த நிலையில் இந்த இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இரத்ததான நிகழ்வில் வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர், யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கினர்.

Share this Article