சாவகச்சேரி ஆலயத்தில் திருடர்கள் கைவரிசை!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

யாழ்ப்பாணம் சாவகச்சேரி காளி கோவில் மற்றும் அதனோடு அமைந்துள்ள வாகனம் திருத்தும் நிலையம் ஆகியன உடைத்துக் கொள்ளையிடப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் நேற்று (பெப்ரவரி 2)அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

கடவுளுக்கு அணிவிக்கப்பட்டிருந்த ஒன்றரைப் பவுண் தங்க ஆபரணங்களும், உண்டியலிலிருந்த 35,000 ரூபா பணமும், ஆலயத்தில் இருந்த அரிசி மூடைகள் மூன்றும் கொள்ளையிடப்பட்டுள்ளன.

வாகனம் திருத்தும் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளது.

இந்த ஆலயத்தில் இடம்பெற்று வந்த வருடாந்த மாகோற்சவம் நேற்று முன்தினம் நிறைவடைந்த நிலையிலேயே இந்தக் கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Article