யாழ். பல்கலை பேரவை உறுப்பினர்களாக அருட்தந்தையர்கள் நியமனம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ். பல்கலைக்கழகப் பேரவைக்கான வெளிவாரி உறுப்பினர்களாக புதிதாக 14 பேர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் யாழ். மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் மற்றும் யாழ். மறைமாவட்டக்குருவும் வாழ்நாள் பேராசிரியருமான அருட்தந்தை பிலேந்திரன் அவர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளார்கள்.

பேரவையின் வெளிவாரி உறுப்பினர்களாகப் பதவி வகித்தவர்களின் பதவிக் காலம் கடந்த 15 ஆம் திகதியுடன் முடிவடைந்த நிலையில் கடந்த 16 ஆம் திகதி முதல் தொடர்ந்துவரும் மூன்று வருடங்களுக்கு இவர்கள் வெளிவாரி உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழவின் தலைவர் சிரேஸ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

Share this Article