சாரதியை அச்சுறுத்தி லொறி திருட்டு – ஆனைக்கோட்டையைச் சேர்ந்தவர் கைது!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

மானிப்பாய், உடுவிலில் சாரதியை அச்சுறுத்தி லொறி ஒன்றைத் திருடிச் சென்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சாரதி லொறியை நிறுத்திவிட்டு தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் அங்கு வந்த சிலர் சாரதியை அச்சுறுத்தி லொறியைத் திருடிச் சென்றனர் என்று கூறப்படுகின்றது.

பொலிஸில் இது தொடர்பில் முறையிடப்பட்டதை அடுத்து, மானிப்பாய் பொலிஸார் சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டையைச் சேர்ந்த 33 வயது நபர் என்று தெரிவிக்கப்பட்டது.

Share this Article