மாமுனைக் கடலில் குளிக்கச் சென்ற சிறுவன் மாயம்! – தேடுதல் தீவிரம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வடமராட்சி கிழக்கு மாமுனைக் கடலில் குளிக்கச் சென்ற சிறுவர்களில் ஒருவர் கடலில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். ஒருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இன்று (ஜனவரி 29) மதியம் 3 சிறுவர்கள் கடலில் குளிப்பதற்குச் சென்றபோதே இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

நாகர்கோயிலைச் சேர்ந்த நந்தகுமாரன் திருக்குமரன் என்ற 15 வயதுச் சிறுவனே காணாமல் போயுள்ளார். 16 வயதுடைய சிறுவன் ஒருவரே மீட்கப்பட்டு மருத்துமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கடலில் இழுத்துச் செல்லப்பட்ட சிறுவனைத் தேடும் பணிகளில் கடற்படையினரும், பிரதேச மக்களும் ஈடுபட்டுள்ளனர்.

Share this Article