சாவகச்சேரியில் இரு மோட்டார்சைக்கிள்கள் மோதி விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

சாவகச்சேரியில் இன்று (ஜனவரி 29) மாலை நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

மாலை 6.30 மணியளவில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து நடந்துள்ளது.

சாவகச்சேரி, சங்கத்தானையைச் சேர்ந்த சண்முகலிங்கம் பிரஷாத் என்னும் 30 வயதுடையவரே உயிரிழந்துள்ளார்.

கரவெட்டியைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் சாவகச்சேரிப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share this Article