இளவாலையில் குழு மோதல்!!- இளைஞன் பரிதாபச் சாவு!!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

யாழ்.இளவாலையில் ஒரே கிராமத்தை சோ்ந்த இரு தரப்புக்கிடையே நடந்த தனிப்பட்ட மோதல் சம்பவத்தில் ஒருவா் உயிாிழந்துள்ளதுள்ள நிலையில், சம்பவத்துடன் தொடா்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இளைவாலை – பொியவிளான் பகுதியில் வீதியால் வடை விற்பனை செய்யும் வண்டிலை இளைஞா்கள் சிலா் தள்ளிச் சென்றுள்ளனா்.

அதே பகுதியை சோ்ந்த மற்றொரு இளைஞா் குழு துவிச்சக்கர வண்டியில் அவ்வீதியால் வந்திருக்கின்றது.
இதன்போது இரு தரப்பிற்குமிடையே உருவான வாய்த்தா்க்கம் பின்னா் மோதலாக மாறியுள்ளது.

சம்பவத்தில் அதே கிராமத்தைச் சோ்ந்த 29 வயதுடைய புஸ்பராசா நிஷாந்தன் என்ற இளைஞன் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

எனினும் தனக்கு எதுவுமில்லை எனவும், தான் வைத்தியசாலையிலிருந்து சுயவிருப்பில் வெளியேறுவதாகவும் எழுதிக் கொடுத்துவிட்டு வீடு திரும்பியவா் வீட்டிற்கு சென்றதும் இரத்தமாக வாந்தி எடுத்துள்ளாா்.

பின்னா் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று (ஜனவரி 27) உயிாிழந்துள்ளாா். தலையில் பலமாக தாக்கியதாலேயே அவா் உயிாிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த சம்பவத்துடன் தொடா்புடைய சந்தேகத்தில் 17 வயதான ஒருவரும், 25 வயதான ஒருவரும் இளவாலை பொலிஸாாினால் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இவா்களில் 17 வயதான நபரே மேற்படி தாக்குதல் மற்றும் கொலை சம்பவத்துடன் தொடா்புடைய பிரதான சந்தேகநபா் எனப் பொலிஸாா் கூறியுள்ளனா்.

இந்தச் சம்பவம் தொடா்பான மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸாா் மேற்கொண்டுள்ளனா்.

Share this Article