அனலைதீவில் பெருந்தொகைக் கேரளக் கஞ்சா மீட்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

அனலைதீவு கடற்கரைப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 60 கிலோ கேரளக் கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

ஊர்காவற்றுறைப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் நேற்று (ஜனவரி 25) கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட கேரளக் கஞ்சாவின் பெறுமதி ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகம் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை. பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட கஞ்சாவை ஊர்காவற்றுறை நீதிமன்றில் பாரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Share this Article