புங்குடுதீவில் சட்டவிரோத மின் இணைப்பை வழங்கியவர் கைது!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

புங்குடுதீவு ஏழாம் வட்டாரப் பகுதியில், வீட்டிலிருந்து பிறிதொரு வீட்டுக்கு சட்டவிரோதமான முறையில் மின் இணைப்பை வழங்கிய நபர் கைது செய்யப்பட்டார் என்று ஊர்காவற்றுறைப் பொலிஸார் நேற்று (ஜனவரி 23) திங்கட்கிழமை தெரிவித்தனர்.

மின்சார சபைக்குச் சொந்தமான மின்மானியை சேதப்படுத்தி, வீட்டிலிருந்து நபரொருவர் அயல் வீட்டுக்கு மின்சாரத்தை வழங்கி வந்துள்ளார்.

இது தொடர்பில் ஊர்காவற்றுறைப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கமைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட நபரை ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

Share this Article