வீதியில் துரத்தப்பட்டு குடும்பஸ்தர் வெட்டிக் கொலை – கோப்பாயில் சம்பவம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கோப்பாயில் நேற்று (ஜனவரி 21) குடும்பத் தலைவர் ஒருவர் வீதியில் துரத்தி வெட்டப்பட்டுக் கோரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் இரவு 8 மணியளவில் கோப்பாய், இராசபாதையில் நடந்துள்ளது. கொல்லப்பட்டவர் கோப்பாய், இராச பாதையைச் சேர்ந்தவர் என்றும், சைக்கிள் திருத்தகம் ஒன்றின் உரிமையாளர் என்றும் கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

மூகமூடிகள் அணிந்தவாறு மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் வாள் வெட்டுத் தாக்குதலை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share this Article