வடக்கு, கிழக்கில் கட்டுப்பணம் செலுத்தியது ஈ.பி.டி.பி.

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலுக்கான கட்டுப்பணம் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியால் செலுத்தப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் போட்டியிடுவதற்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

வேட்பு மனுக்களைச் சமர்ப்பிப்பதற்கான இறுதிக் கட்டப் பணிகள் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் வழிநடத்தலில் மாவட்ட மற்றும் பிரதேச அமைப்பாளர் முன்னெடுத்து வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Share this Article