போதையில் வீதியில் உறங்கியவர் சிகிச்சை பயனின்றி உயிரிழப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

அதிக மது போதையில் வீதியில் வீழ்ந்து படுத்தவர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போதும் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

மீசாலை வடக்கு, கொடிகாமத்தைச் சேர்ந்த 54 வயதான சுப்பிரமணியம் சிவகுமார் என்பவரே உயிரிழந்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர் மதுபோதையில் வீடு திரும்பியபோது, அது இயலாது வழியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் முன்பாகப் படுத்து உறங்கியுள்ளார்.

வர்த்தக நிலையத்தை இரவு 9 மணியளவில் மூடும்போது, இவரது வாயில் நுரை தள்ளியிருப்பதை அவதானித்து அங்கிருந்தவர்கள் நோயாளர் காவு வண்டிக்கு அறிவித்து சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்ப்பித்துள்ளனர்.

அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு இவர் மாற்றப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பயனின்றி நேற்று (ஜனவரி 17) அவர் உயிரிழந்துள்ளார்.

இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டார்.

Share this Article