யாழ் மாவட்ட செயலராக சிவபாலசுந்தரம் நியமனம்!!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

யாழ்ப்பாண மாவட்டத்தின் புதிய மாவட்ட செயலராக அம்பலவாணர் சிவபாலசுந்தரம் நேற்று (ஜனவரி 17) பிற்பகல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பிரதமர் அலுவலகத்தில் வைத்து தமக்கான நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று (ஜனவரி 18) காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரையான சுபவேளையில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கவுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட செயலராக கடமையாற்றிய க.மகேசன் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளராக அண்மையில் பதவியுயர்வு பெற்றுள்ளார்.

அதையடுத்து நிலவிய வெற்றிடத்துக்கு புதிய மாவட்ட செயலராக அம்பலவாணர் சிவபாலசுந்தரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் இதற்கு முன்னர் வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளராக கடமையாற்றியிருந்தார்.

Share this Article