உள்ளூராட்சி தேர்தலுக்கான முன்னேற்பாட்டுக் கலந்துரையாடல்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை பெற்றுக்கொள்ளல் தொடர்பான முன்னேற்பாட்டுக் கலந்துரையாடல் நேற்று (ஜனவரி 18) பி.ப 3.30 மணிணக்கு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இந்த முன்னேற்பாட்டுக் கலந்துரையாடல் நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் மேலதிக மாவட்ட செயலர் ( காணி) எஸ். முரளிதரன், மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் இ.கி.அமல்ராஜ், மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் தேர்தல்கள் அலுவலக உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

Share this Article