யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அதிகரிக்கும் டெங்குத் தொற்று!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read
This image depicts an adult female Aedes aegypti mosquito feeding on a human subject with darker skin tone.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்குள் 255 டெங்குத் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் முதல் இரண்டு வாரங்களில் 4 ஆயிரத்து 178 டெங்குத் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவாக 871 டெங்குத் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் கம்பஹா மாவட்டத்தில் 846 தொற்றாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் 224 தொற்றாளர்களும், கண்டியில் 190 தொற்றாளர்களும் இதுவரையான காலப்பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Share this Article