யாழ்ப்பாணத்தில் நடந்த விபத்தில் இளைஞன் உயிரிழப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை மாவிட்டபுரத்தில் நேற்று (ஜனவரி 16) நடந்த விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சைக்கிளில் பயணித்த இளைஞரை பட்டா ரக வாகனம் மோதியதில் இந்த விபத்து நடந்துள்ளது. மாவிட்டபுரம், மாவைக்கலட்டியைச் சேர்ந்த தா.தினேஷ் என்ற 27 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளார்.

பட்டா வாகனத்தின் சாரதி காங்கேசன்துறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். விபத்துத் தொடர்பான விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Share this Article