யாழ்ப்பாணத்தில் ரணிலுக்கு கடும் எதிர்ப்பு – பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

பொங்கல் தினமான இன்று (ஜனவரி 15) பொங்கல் நிகழ்விலும், பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்துகொள்வதற்காக யாழ்ப்பாணத்துக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வந்திருந்த நிலையில், அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தால் பதற்ற நிலைமை ஏற்பட்டது.

நல்லூர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பெரும் ஆர்ப்பாட்டத்தை அடுத்து நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், பொதுமக்கள், பல்கலைக் கழக மாணவர்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

நல்லூர் பாரதி சிலைக்கு அண்மையில் வீதித் தடை ஏற்படுத்தி பொலிஸாரும், சிறப்பு அதிரடிப் படையினரும் பெரும் எண்ணிக்கையில் குவிக்கப்பட்டிருந்த நிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், பொலிஸார், சிறப்பு அதிரடிப் படையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Share this Article