கட்டுப்பாட்டை இழந்து கராஜூக்குள் புகுந்த இ.போ.ச.பஸ்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

இன்று காலை (ஜனவரி 13) யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கிப் பயணித்த இ.போ.ச. பஸ், சிறுப்பிட்டி பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.

கட்டுப்பாட்டை இழந்த இ.போ.ச. பஸ் வீதியை விட்டு விலகி வாகனம் திருத்தும் நிலையம் ஒன்றுக்குள் புகுந்து அங்கிருந்த வாகனங்களை மோதித் தள்ளியது. இந்த விபத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

விபத்துச் சம்பவம் தொடர்பாக அச்சுவேலிப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share this Article