நாரந்தனை மகா வித்தியாலயத்தின் ஒளிவிழாவும், விளையாட்டரங்கு திறப்பும்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

நாரந்தனை றோ.க. மகா வித்தியாலயத்தின் ஒளிவிழாவும், தொழில் பயிற்சி மற்றும் உள்ளக விளையாட்டரங்கு திறப்பு விழாவும் இன்று (ஜனவரி 12) நடைபெற்றது.

பாடசாலை அதிபர் திருமதி சோ.கிருபானந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வடமாகாண கல்வித் திணைக்களத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.விஸ்ணுகரன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.

சிறப்பு விருந்தினர்களாக தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் தி.ஞானசுந்தரம், நாரந்தனை பங்குத் தந்ழதை அருட்திரு சி.அஜந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கௌரவ விருந்தினர்களாக யாழ்.சமூக செயற்பாட்டு மையத்தின் இணைப்பாளர் ந.சுகிர்தராஜன், யாழ். நகர் றோட்டறக் கழக இணைப்பாளர்களான கே.ஹரிஹரன், யே.கெட்விட் ஜெலான், நாரந்தனை மக்கள் நல்வாழ்வுச் சங்கத்தின் தலைவர் அன்ரனி பெர்னாண்டோ ஆகியோர் கலந்து கொண்டனர்.

Share this Article