மனைவிக்கு வாள்வெட்டு!-கணவர் மடக்கிப் பிடிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

தனது மனைவியை வாளால் வெட்டிக் காயப்படுத்திய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த ஒருவர் நேற்று (ஜனவரி 11) கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இருபாலை, மடத்தடியில் கடந்த வாரம் இந்தச் சம்பவம் நடந்திருந்தது. மனைவியை வாளால் வெட்டிக் காயப்படுத்திய கணவர் தலைமறைவாகியிருந்த நிலையில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தார்.

10 நாள்களாக அவர் தலைமறைவாகவிருந்த நிலையில், நேற்றுக் கோப்பாய் பொலிஸார் அவரைக் கைது செய்தனர்.

வலைப்பாடு பகுதியில் உள்ள வீடொன்றில் சந்தேகநபர் மறைந்திருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் கோப்பாய் பொலிஸார் சந்தேகநபரைக் கைது செய்தனர்.

தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டது என்று நம்பப்படும் வாள் ஒன்றும் சந்தேகநபரின் வீட்டிலுள்ள கோழிக் கூண்டுக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

Share this Article