தொண்டைமானாறு கடல் நீரேரியில் மிதந்த ஆணின் சடலம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்துக்குப் பின்புறமாக உள்ள கடல் நீரேரியில் முதியவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இன்று புதன்கிழமை (ஜனவரி 11) காலை அங்கு நீராடச் சென்றவர்கள் சடலமொன்று மிதப்பதை அவதானித்து வல்வெட்டித்துறைப் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

ஆலயத்துக்கு வந்த முதியவர் நீரேரியில் நீராட முற்பட்டபோது நீரில் மூழ்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

சடலம் மீட்கப்பட்டு மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் வல்வெட்டித்துறைப் பொலிஸாரால் முன்னெடுக்கப்படுகின்றன.

Share this Article