விபத்தில் சிக்கியவர் சிகிச்சை பயனின்றி உயிரிழப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

சைக்கிளில் பயணித்த முதியவரை மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்துச் சம்பவம் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை (ஜனவரி 9) கொடிகாமம், கொயிலாமனைச் சந்தியில் நடந்தது. கொடிகாமத்தைச் சேர்ந்த இ.இலட்சுமிநாதன் என்ற 75 வயது முதியவரே உயிரிழந்தவராவார்.

விபத்தில் தலையில் படுகாயமடைந்த முதியவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

அவருக்குச் சிகிச்சைகள் வழங்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பயனின்றி நேற்று உயிரிழந்தார்.

இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டார்.

Share this Article