தமிழாராய்ச்சிப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட 4ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டோரின் 49 ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (ஜனவரி 10) யாழ்ப்பாணம் முற்றவெளியில் உள்ள நினைவாலயத்தில் நடைபெற்றது.

நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமுமான எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டிலும், இலங்கைத் தமிழரசுக் கட்சி நாடாளுமுன்ற உறுப்பினர்கள் ஏற்பாட்டிலும் இரு நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.

Share this Article