இலங்கை வங்கியின் காரியாலயம் காங்கேசன்துறையில் திறப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

காங்கேசன்துறையில் இலங்கை வங்கியின் காரியாலயம் இன்று (ஜனவரி 9) வைபவ ரீதியாகத் திறக்கப்பட்டது.

போரால் ஏற்பட்ட இடம்பெயர்வுக்குப் பின்னர், 1981 ஆண்டுக்குப் பின்னர் இலங்கை வங்கியின் காங்கேசன்துறை காரியாலயம் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த வங்கி கிளைக் திறப்பு நிகழ்வில் இலங்கை வங்கியின் பிரதிப் பொது முகாமையாளர், வடபிராந்திய முகாமையாளர் யாழ். மாவட்ட ராணுவ கட்டளை தளபதி, பொலிஸ் உயர் அதிகாரிகள் மற்றும் இலங்கை வங்கியின் முகாமையாளர்கள், வாடிக்கையாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்

Share this Article