விடுதலைப் புலிகள் இருந்த வீட்டில் ஆயுதக் கிடங்காம்!!- அகழ்வுக்கு ஏற்பாடு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கொக்குவில் பொற்பதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, அங்கு அகழ்வுப் பணி முன்னெடுக்கப்படவுள்ளன.

விடுதலைப் புலிகளின் முகாம் அமைந்திருந்த வீடு ஒன்றிலேயே இந்த அகழ்வுப் பணி முன்னெடுக்கப்படவுள்ளன.

பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலை அடுத்தே அகழ்வுப் பணிக்கான நீதிமன்ற அனுமதி பெறப்பட்டுள்ளது.

இந்த அகழ்வுப் பணிகள் நாளை (ஜனவரி 9) ஆரம்பமாகும் என்று விசேட அதிரடிப்படைத் தரப்பு தெரிவித்தன.

Share this Article