தங்க ஆபரணம் கொண்டு வருவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நாட்டுக்குள் தங்கம் கடத்தப்படுவதைத் தடுக்கும் நோக்கில் 22 கரட்டுக்கு மேற்பட்ட தங்கத்தை ஆபரணங்களாக கொண்டு வருவதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை நிதி அமைச்சு நேற்று (ஜனவரி 5) வெளியிட்டுள்ளது என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

22 கரட்டுக்கும் மேற்பட்ட தங்க ஆபரணங்களை இறக்குமதி செய்வதற்கு விசேட அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article