உள்ளூராட்சித் தேர்தல் பரப்புரைகளில் ரணில் நடுநிலைமை!!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பரப்புரைகளில் நடவடிக்கையில் ஈடுபடாமல், நடுநிலை வகிப்பதற்கு ஜனாதிபதியும், ஐக்கிய தேசியக் கட்சி தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் நேற்று (ஜனவரி 4) நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போது ஜனாதிபதி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார் என அறிய முடிந்தது.

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்கே எனக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது. எனவே, ஈராண்டுகளில் அதற்கே முன்னுரிமை, முக்கியத்துவம் வழங்குவேன் என்று ஜனாதிபதி இந்தக் கலந்துரையாடலில் குறிப்பிட்டுள்ளார்.

Share this Article