உள்ளூராட்சி தேர்தலுக்காக வேட்பு மனுக் கோரல் திகதி அறிவிப்பு

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

உத்தேச உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக் கோரல் திகதிகள் தேர்தல்கள் திணைக்களத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி நண்பகல் வரையில் தேர்தலுக்கான வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய முடியும்.

இதற்கான அறிவித்தல் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களின் ஊடாக வெளியிடப்பட்டுள்ளது.

21ஆம் திகதி நண்பகலுக்குப் பின்னர் முறைப்பாட்டுக்கான காலம் ஒதுக்கப்படும்.

வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் தினத்தில் இருந்து 6 வாரங்களுக்குள் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிப்பக்கப்படும்.

Share this Article