வெற்றிலைக்கேணியில் விபத்து – இருவர் படுகாயம்

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வடமராட்சி கிழக்கு, வெற்றிலைக்கேணியில் நேற்று (ஜனவரி 2) நடந்த விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்களில் ஒருவரான மருதங்கேணி பிரதேச செயலக ஊழியர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இரு மோட்டார் சைக்கிள்களில் வந்த இருவரே விபத்துக்குள்ளாகியுள்ளனர். விபத்தில் படுகாயமடைந்த பிரதேச செயலக ஊழியர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

விபத்தில் காயமடைந்த மற்றையவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Share this Article