எல்லைதாண்டிய இந்திய மீனவர்களுக்கு 3 வருட சிறைத்தண்டனை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

எல்லைதாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 12 பேருக்கு, 10 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட 3 வருட சாதாரண சிறைத்தண்டனை பருத்தித்துறை நீதிமன்றத்தால் இன்று (ஜனவரி 2) விதிக்கப்பட்டது.

கடந்த டிசெம்பர் மாதம் 21ஆம் திகதி இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர். அவர்களின் படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டது.

கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து 12 பேருக்கும் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அதேநேரம் கைப்பற்றப்பட்ட படகு மற்றும் சான்று பொருட்களை அரசுடமையாக்குமாறு பருத்தித்துறை நீதவான் பொன்னுத்துரை கிரிசாந்தன் உத்தரவிட்டார்.

Share this Article