பாடசாலை கற்றல் நடவடிக்கை ஆரம்பம் – விடுமுறை தொடர்பில் வெளியான அறிவித்தல்

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

அரசாங்க மற்றும் அரசாங்க அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்று (ஜனவரி 2) ஆரம்பமாகியுள்ளன.

இன்று ஆரம்பமாகும் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டக் கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் 20ஆம் திகதியுடன் நிறைவடையும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. ஜனவரி 21ஆம் திகதி மூன்றாம் தவணைக்கான பாடசாலை விடுமுறை வழங்கப்படவுள்ளது.

கல்விப் பொதுத் தராதார சாதாரண தரப் பரீட்சை காரணமாக மூன்றாம் தவணைக்காக எதிர்வரும் 21ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது.

Share this Article