புத்தாண்டு தினத்தில் யாழில் வாள்வெட்டு – குடும்பஸ்தர் படுகாயம்!!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

மானிப்பாய், கல்லுண்டாயில் இன்று (ஜனவரி 1) இரவு நடந்த வாள் வெட்டுச் சம்பவத்தில் 34 வயதுடைய ஒருவர் படுகாயமடைந்தார்.

வீட்டுக்கு முன்பாக நின்றவர் மீது இனந்தெரியாதவர்கள் வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலே வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தியுள்ளது. வாள்வெட்டில் காயமடைந்தவர் நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்வைத்துள்ளனர்.

Share this Article