இன்றுடன் பணியிலிருந்து ஓய்வு பெறும் 30 ஆயிரம் பேர்!!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நாடு முழுவதும் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசாங்க ஊழியர்கள் இன்றுடன் (டிசெம்பர் 31) ஓய்வு பெறுகின்றனர்.

இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு அரசாங்கம் உரிய வேலைத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது என்று இராஜாங்க அமைச்சர் ஜானக லக்கும்புர தெரிவித்தார்.

ஒரே தடவையில் இவ்வாறு பெருமளவானோர் ஓய்வு பெற்றுச் செல்வதால், அரச சேவையில் வீழ்ச்சி ஏற்படாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரச ஊழியர்களின் ஓய்வு தொடர்பில் அரசாங்கம் கொண்டு வந்துள்ள புதிய கொள்கையின் அடிப்படையில் 60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து ஊழியர்களும் இன்று (டிசெம்பர் 31) முதல் ஓய்வு பெறுகின்றனர்.

Share this Article