அல்வாயில் கிணற்றில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாணம், வடமராட்சி அல்வாயில் கிணறு ஒன்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் நேற்று (டிசெம்பர் 30) மீட்கப்பட்டுள்ளது.

அல்வாய், அம்பாள் கோயிலடியைச் சேர்ந்த 60 வயதான சண்முகம் நாகேஸ்வரி என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீ அம்பாள் வித்தியாலயத்தின் பின்புறமாக உள்ள கிணற்றில் இருந்தே இவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவர் குளிக்கச் சென்றபோது தவறிக் கிணற்றில் வீழ்ந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

இந்தச் சம்பவம் தொடர்பில் பருத்தித்துறைப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share this Article