தாக்குதலைக் கண்டித்து கிராம அலுவலர்கள் போராட்டம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

வலிகாமம் வடக்கு கிராம அலுவலர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று (டிசம்பர் 30) மேற்கொண்டனர்.

யாழ். வலிகாமம் வடக்கு கட்டுவன் மேற்கு கிராம அலுவலகம் தொடர்ச்சியாக தாக்கப்பட்டு வருவதைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஐக்கிய இலங்கை கிராம சேவையாளர் சங்கம் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம அலுவலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தமது சேவைக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

வலி.வடக்கு கட்டுவன் மேற்கு கிராம அலுவலர் அலுவலகம் கடந்த ஒரு வருட காலத்துக்குள் மூன்று முறை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.

அலுவலகம் தாக்கப்பட்டு ஆவணங்கள் எரியூட்டப்பட்டிருக்கும் நிலையில், இதுதொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்று கூறப்படுகின்றது.

Share this Article