முதலாம் திகதி முதல் எரிபொருள் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

எரிபொருள் விலைகளில் மாற்றம் செய்வது தொடர்பில் இன்று (டிசெம்பர் 30) தீர்மானிக்கப்படும் என்று அறிய முடிகின்றது.

நாளை மறுதினம் முதலாம் திகதி எரிபொருள் விலைச் சூத்திரத்துக்கு அமைய எரிபொருள் நிலைகளில் மாற்றம் செய்யப்பட வேண்டும்.

எரிபொருள் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம் தொடர்பில் இன்னமும் தீர்மானம் எடுக்கப்படவில்லை என்று எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் இன்று (டிசெம்பர் 30) நடைபெறவுள்ள கூட்டத்தின் பின்னரே எரிபொருள் விலைகளில் மேற்கொள்ளப்படவுள்ள மாற்றம் தொடர்பில் தீர்மானம் எட்டப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, உலக சந்தை நிலைவரைங்களின்படி, எரிபொருள் விலைகள் குறைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Share this Article