வவுனியாவில் 32வது வீரமக்கள் தினம் ஆரம்பம்.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் 32வது வீரமக்கள் தினம் நேற்று ஜீலை 13) ஆரம்பமானது.
வவுனியா கோயில்குளத்தில் அமைந்துள்ள அமரர் தோழர் க.உமாமகேஸ்வரன் இல்லத்தில் நேற்று ஜீலை 13) காலை 09.30 மணியளவில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் வவுனியா மாவட்ட அமைப்பாளரும் வவுனியா நகரசபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களின் தலைமையில் அஞ்சலி நிகழ்வு ஆரம்பமானது.
இதன்போது தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து கழகத்தின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டதுடன் செயலதிபர் அமரர் தோழர் க.உமாமகேஸ்வரன் அவர்களின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்வில் கட்சியின் உபதலைவர்களுள் ஒருவரான ஜி.ரி. லிங்கநாதன்(விசு), கட்சியின் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் த.யோகராஜா(யோகன்), கட்சியின் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் வே.குகதாசன்(குகன்), கட்சியின் வவுனியா நகரசபை உறுப்பினர் சு காண்டீபன், கட்சியின் மத்திய குழு உறுப்பினர் ரவி, சிரேஷ்ட உறுப்பினர்கள் பரமசிவம், ஓசை, சிவா உள்ளிட்ட கழக தோழர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
Share this Article