நகர சபை உறுப்பினர் காண்டீபன் அவர்களின் பாதீட்டு நிதியில் வீதி அமைப்பு பணிகள்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read
வவுனியா நகர சபை உறுப்பினர் சுந்தரலிங்கம் காண்டீபன் அவர்களின் பாதீட்டு நிதியில் வீதி அமைப்பு பணிகள்.
வவுனியா நகர சபை உறுப்பினரும் PLOTE அமைப்பின் மத்தியகுழு உறுப்பினரும் ஆசிரியருமான சுந்தரலிங்கம் காண்டீபன் அவர்களின் பாதீட்டு நிதியில் திருநாவற்குளம் சிவன் ஆலய வெளி வீதி முதன் முறையாக 1.5 மில்லியன் நிதியில் 330m தூரம் கிரவலிடல் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
மேற்படி அபிவிருத்தி பணிகளை நகர சபை உறுப்பினர் சுந்தரலிங்கம் காண்டீபன், திருநாவற்குளம் கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் சந்திரேஸ்வரன் ரவி ஆகியோர் நேரடியாக சென்று பார்வையிட்டதுடன், மிக நேர்த்தியான வேலைத்திட்டமாக முன்னெடுக்கப்படுகின்றது.
திருநாவற்குளம் கிராமத்தில் 22 வருடங்களின் பின்னர் முதன் முறையாக இவ் வீதி கிரவலிடல் வேலைகள் நடைபெறுகின்றமையால் கிராம மக்கள் தமது வட்டார உறுப்பினர் சுந்தரலிங்கம் காண்டீபன் அவர்களுக்கு நன்றிகளையும் மக்கள் பணிக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தமை குறிப்பிட்டத்தக்கது.
Share this Article