கிளிநொச்சி பெரியகுளத்தில் சட்டவிரோத மணல் அகழ்வு

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியகுளம் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிலையில் உரிய அதிகாரிகள் தடுத்து நிறுத்த முன்வரவில்லையென மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
சுமார் மூன்று வருடங்களுக்கு மேலாக இவ்வாறு சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருவதால் இதனால் வீதிகள், விவசாய நிலங்கள் என்பன பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுப்படும் கனரக வாகனங்களின் அதிகரித்த பயன்பாட்டினால் வீதிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
தங்கள் பிரதேசத்தில் இடம்பெற்று வரும் சட்டவிரோத மணல் அகழ்வினை தடுத்து நிறுத்த அதிகாரிகள், பொலிஸ் உள்ளிட்டவர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Share this Article