தீவகம் அனலைதீவில் முன்னோரையும் அறிவுமயப்படுத்த உழைத்த ஆசான்களுக்கான கௌரவமாக அவர்களது நினைவாக அதிதேவையான உதவியை எதிர்பார்க்கும் மாணவர்களுக்கு “கல்வி உதவித்தொகை வழங்கல்” (scholarship) என்ற திட்டத்தினூடாக கிராமத்தின் முன்னோடிகளை கௌரவப்படுத்தும் முதற்கட்டக் கொடுப்பனவு வைகாசி, 2019 ஆம் ஆண்டிலிருந்து, அனலை மக்களின் ஆதரவோடு, அனலைதீவு கலாசார ஒன்றியம் கனடா அமைப்பினால் மனப்பூர்வமாகத் தொடங்கிவைக்கப்பட்டது.
அனலையில் கல்வி வளர்ச்சிக்கு உழைத்து அண்மையில் அமரத்துவமடைந்த மதிப்பிற்குரிய முன்னாள் அதிபர் திரு. காராளபிள்ளை சிவப்பிரகாசம் அவர்களும் இத்திட்டத்தினால் கௌரவிக்கப்படுகின்றார்.
அனலையில் மாணவர்களின் கல்விக்கு உதவித்தொகை வழங்கும் இத்திட்டத்தின் மூலம் வைகாசி 2019 தொடக்கம் மாசி 2021 காலப்பகுதிவரை 366,000 உரூபாய் உதவித்தொகை அனலைதீவு கலாச்சார ஒன்றியம் கனடா அமைப்பினால் அனலையிலுள்ள அதிதேவையுடைய மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இத்திட்டத்தின் வளர்ச்சிக்கு மக்களின் பங்களிப்பு இன்றியமையாததாகும்.
கல்வி உதவித்தொகை (scholarship) வழங்கல் மூலம் நினைவுகூரப்பட்டு கெளரவிக்கப்படும் ஆசிரியர்கள்.
திரு.அ.சின்னப்பா
திரு.சி. வேலுப்பிள்ளை
திரு.வே. ஐயம்பிள்ளை
திரு.ச. கணபதிப்பிள்ளை
திருமதி. சியாமளவல்லி கணபதிப்பிள்ளை
திரு.சி. தில்லையம்பலம்
திரு.சு. சிவபாதசுந்தரம் B.A
திரு.க. இளையதம்பி
வித்துவான் திரு. ப. கணபதிப்பிள்ளை B.A. (Hons)
திரு.வே. குமாரசாமி
திரு.ஐ. வைத்திலிங்கம்
நா.ப. இராசையா
திரு.நா. செல்லத்துரை
திரு.வி. நடராசா
திரு.க. சங்கரன்(சிவனடியான்)
திரு.மு. சீவரெத்ததினம்
திரு.இ. பொன்னம்பலம் B.A
திரு.ச. பொன்னம்பலம்
செல்வி. நாகமுத்து பசுபதிப்பிள்ளை
செல்வி. மனோன்மணி சுப்பையா
திரு.ச. பாலசிங்கம்
திரு.சி. நல்லையா
திரு.க. கோபாலபிள்ளை
திரு.வை. குணானந்தன்
திரு.கு. கணேசமூர்த்தி