கிளிமாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று இடம் பெற்றது

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்றைய தினம் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணை தலைவரும்  அமைச்சருமான கௌர திரு.கே.என்.டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இதன் போது கிளிநொச்சி மாவட்டத்தின் விவசாயம், கல்வி, பாதுகாப்பு, சிவில் நிர்வாகம், போக்குவரத்து, கடற்தொழில், வீட்டுத் திட்டம், காணி உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

குறித்த கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ.கஜேந்திரன், மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், பிரதேச செயலாளர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், திணைக்களங்கள் சார் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

நேற்றைய தினம் கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் இரணைமடுக் குளத்திற்கு விஜயம் செய்து மீன்களை பாதுகாக்கும் வேலைத்திட்டமொன்றை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article