மாதாந்தம் 45 ஆயிரம் ரூபாவுக்கு மேல் வருமானம் பெறுபவர்களிடம் இருந்து வரி அறவிட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் நிபந்தனை விதித்துள்ளது.
அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்த்தன இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துக்கும், இலங்கைக்கும் இடையிலான ஒப்பந்தம் இன்னமும் பகிரங்கப்படுத்தப்படாத போதும், கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தத் தகவலை வெளிப்படுத்தினார் என்று பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
ஆயினும் அரசாங்கம் ஒரு லட்சம் ரூபாவுக்கு மேல் வருமானம் பெறுவோரிடம் இருந்து மட்டுமே வரி அறவிடுவது என்ற தீர்மானத்தில் இருந்து மாறவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.