காட்டுப்புலம் அரச தமிழ் கலவன் பாடசாலையில் 35 வருடங்களுக்கு பின்னர் மாணவன் ஒருவன் சித்தி எய்தியுள்ளான்.
சுரேஷ் தபிஸ்ரன் என்ற மாணவனே 179 புள்ளிகளைப் பெற்று இவ்வாறு சித்தியடைந்துள்ளான்.
மிகவும் பின் தங்கிய இந்த பிரதேசத்தில் பல இன்னல்களுக்கு மத்தியில் கல்வியினைக் கற்று சித்தியடைந்து பெற்றோருக்கும், பாடசாலைக்கும், ஊருக்கும் பெருமை தேடிக்கொடுத்த இந்த மாணவனை பலரும் பாராட்டி வருகின்றனர்.