மன்னார் தாழ்வுப்பாட்டில் பொலிஸ் மற்றும் இராணுவம் இணைந்து நேற்று(செப்ரெம்பர் 23) மாலை மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் 3 கோடி ரூபா பெறுமதியான போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
மன்னார் தள்ளாடி இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரசிய தகவல்களை அடுத்து இந்தச் சுற்றி வளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தாழ்வுபாடு காட்டுப் பகுதிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3 கோடி ரூபா பெறுமதியான போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன.
இதன் போது மன்னார் தாராபுரத்தைச் சேர்ந்த 22 வயதான இளைஞர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.